டிகே சிவகுமார் Vs அண்ணாமலை.. பதிலுக்கு பதில்..!



DK Sivakumar Vs Annamalai on 22 March 2025 


தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில், இன்று சென்னையில் நாடாளுமன்ற மறுசீரமைப்பு எதிர்ப்பு கூட்டுக்குழு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கேரளா முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உட்பட பல மாநிலங்களை சேர்ந்த அரசியல்கட்சி தலைவர்கள் பங்கேற்று இருந்தனர். அடுத்தகட்ட ஆலோசனைக்கூட்டம் தெலுங்கானாவில் நடைபெறுகிறது.

டிகே சிவகுமார் பேட்டி

இந்நிலையில், நிகழ்ச்சி முடிந்தபின்னர் பெங்களூருக்கு புறப்பட்ட டிகே சிவகுமார், சென்னை விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, செய்தியாளர்கள் தரப்பில், அண்ணாமலையின் சிவகுமாருக்கு எதிரான கருத்து தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு பதில் அளித்த சிவகுமார், "அண்ணாமலை கர்நாடகா மாநிலத்தில் வேலை பார்த்தவர். அவருக்கு எங்களின் வலிமையைப்பற்றி தெரியும். ஏழை மனிதர் அண்ணாமலை பணிகள் சிறக்க வாழ்த்துகிறேன்" என தெரிவித்து, சில உள்நோக்க கருத்துக்களை பதிவு செய்தார்.

 

இதையும் படிங்க: #Breaking: திமுக அரங்கேற்றும் மெகா நாடகம்.. தோலுரிக்க பாஜக போராட்டம் - அண்ணாமலை அறிவிப்பு.!

அண்ணாமலை பதிலடி

இந்த விசயத்திற்கு தனது எக்ஸ் வலைப்பதிவு வாயிலாக பதில் அளித்திருக்கும் பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை, "உண்மைதான். நான் கர்நாடக மாநில மக்களுக்காக, எனது தலைசிறந்த பணியை வெளிப்படுத்தி இருந்தேன். விடாமுயற்சியுடன் எனது சேவையை வழங்கினேன். முதல்வர் சித்தராமையாவை வீழ்த்தி, கர்நாடக மாநில முதல்வராக முயற்சிக்கும் உங்களின் பணிகள் சிறக்க நான் வைத்துகிறேன்" என கலாய்க்கும் வகையில் பதில் அளித்துள்ளார். 

 

இதையும் படிங்க: அண்ணாமலைக்கு நாங்க பதில் சொல்ல அவசியமில்லை - தவெக புஸ்ஸி ஆனந்த்.!