குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
உடல் எடை கூடி குண்டா இருந்த லக்ஷ்மி மேனன்- இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? புகைப்படம் உள்ளே!
நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான சுந்தரபாண்டி திரைப்படம் மூலம் தமிழில் அறிமுமாகி தமிழ் ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர் நடிகை லட்சுமி மேனன். அதை தொடர்ந்து கும்கி திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார். அந்த திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்தார் நடிகை லட்சுமி மேனன்.
மேலும் சசிகுமார் நடிப்பில் குட்டி புலி, விஷால் நடிப்பில் சிவப்பு மனிதன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் லட்சுமி மேனன். இதற்கிடையில் அவருக்கு படிப்பதா, நடிப்பதா என்ற குழப்பம் வந்தது. அதிலிருந்து மீண்டும் நடிப்பு தான் என்று முடிவு செய்தார்.
ஆனால் எதிர்பாரதா விதமாக இவரது உடல் எடை கூடிக்கொண்டே போனது. இதனால் பட வாய்ப்புகள் இவர்க்கு குறைந்தது. இந்நிலையில் நடிகர் அஜித்திற்கு தங்கையாக வேதாளம் திரைப்படத்தில் நடித்திருந்தார் லட்சுமி மேனன்.
தற்போது பிரபுதேவாவுடன் யங் மங் சங் படத்தில் மட்டும் நடித்திருக்கிறார். விஜய் சேதுபதியுடன் நடிக்க இருந்த கருப்பன் படத்திலிருந்து விலகினார். ஒரு நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கால் முறிவு ஏற்பட்டதால் கருப்பன் படத்தில் நடிக்கவில்லை.
கால்முறிவுக்கு கட்டுப்போட்டு ஓய்வெடுத்ததில் மேலும் குண்டானார். இதனால் வீட்டை விட்டு வெளியில் வராமல் இருந்த லட்சுமி மேனன், தற்போது 15 கிலோ வரை எடை குறைத்து ஸ்லிம்மாகி இருக்கிறார். அந்த படங்களை தனது பேஸ்புக்கில் வெளியிட்டிருக்கிறார். உடல் எடை குறைந்த நிலையில் தனியாக போட்டோ ஷூட் நடத்தி வாய்ப்புகளை தேட இருக்கிறார் லட்சுமி மேனன்.