லட்சுமி ராமகிருஷ்ணனா இது? முடி எல்லாம் கட் செய்து அப்போ எப்படி இருந்துள்ளார் பாருங்கள்



actress-lakshmi-ramakrishnan-young-look-photo

தனது தலைமுடியெல்லாம் வெட்டிக்கொண்டு இளம் பெண் தோற்றத்தில் இருக்கும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

2006 ஆம் ஆண்டு திரையுலகிற்கு வந்த இவர் மலையாளம் திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு பிரிவோம் சந்திப்போம் என்ற தமிழ் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் லட்சுமி ராமகிருஷ்ணன். அதனை தொடர்ந்து பலவேறு படங்களில் நடித்துள்ள இவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சொல்வேதெல்லாம் உண்மை என்ற தொடர் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார்.

Lakshmi ramakrishnan

பின் இயக்குனராக களமிறங்கி 4 படங்களையும் இயக்கியுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன். சினிமா மட்டும் இல்லாமல் எப்போதும் டுவிட்டர் பக்கத்தில் ஆக்டீவாக இருக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன் தனது பழைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் தலை முடி எல்லாம் கட் செய்து மிகவும் ஒல்லியாக இருக்கிறார். மேலும் மீண்டும் இதுபோன்று தலைமுடியை வெட்டிக்கொள்ள ஆசைப்படுவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார் அவர்.