பட்டப்பகலில்.. ரோட்டில் தோன்றிய காம ஆசை.. கல்லூரி மாணவிக்கு நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்.!



Chennai college women sexually assaulting by unknown person in West mambalam

நடு ரோட்டில் அத்துமீறிய காமுகன்

சென்னை கல்லூரி மாணவி ஒருவர் மேற்கு மாம்பலத்தில் சாலை ஒன்றில் தனியே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் ஒரு மர்ம நபர் வந்துள்ளார். அந்த பெண்ணை பார்த்து அவருக்கு காம ஆசை ஏற்பட்டது. பொது இடம் என்று கூட பார்க்காமல் அந்த பெண்ணிற்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்து இருக்கின்றார்.

அதன் பின் அங்கிருந்து அவர் தப்பியோடிவிட்டார். இது அந்த பெண்ணுக்கு மிகுந்த அதிர்ச்சியை கொடுத்தது. உடனடியாக தனது வீட்டிற்கு சென்று தனது நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சென்னையில் பயங்கரம்... நடுரோட்டில் மாணவிக்கு பாலியல் தொல்லை.!! போலீஸிடம் சிக்கிய குற்றவாளி.!!

chennai

சிசிடிவியால் சிக்கிய சம்பவம்

அந்த பெண் அழுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தந்தை காவல் நிலையத்திற்கு அவரை அழைத்துச் சென்று புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது யார் என்பது கண்டறியப்பட்டது. தற்போது அவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் போலீசார் தங்களது பாணியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பவானியின் பவ்விய காதலில் சிக்கி, ஏமாற்றத்தால் இளைஞர் விபரீதம்..! வாட்ஸப்பில் ஸ்டேட்டஸ் வைத்து சோகம்.!