திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ப்பா.. பிக்பாஸ் லாஸ்லியாவா இது! நம்பவே முடியாத அளவிற்கு இப்போ எப்படி மாறிட்டார் பார்த்தீர்களா! வைரலாகும் புகைப்படம்...
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களால் பெருமளவில் கவரப்பட்டு பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா. இவரது குழந்தை போன்ற பேச்சு, அழகான சிரிப்பு பலரையும் கவர்ந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் நுழைந்த சில நாட்களில் இவருக்கு ஆர்மி உருவானது.
மேலும் சக போட்டியாளரான கவினுடன் காதல் சர்ச்சையில் சிக்கி ஏராளமான விமர்சனங்களை சந்தித்தார். பின்னர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அவர் சினிமாவில் பிஸியாகிவிட்டார். லாஸ்லியாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் அவர் பிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பன் என தொடர்ந்து சில படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் லாஸ்லியாவின் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி இணையத்தில் பரவும். அந்த வகையில் தற்போது லாஸ்லியாவின் லேட்டஸ்ட் புகைப்படமான உடல் எடை சற்று அதிகரித்து கும்முனு உள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.