மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிறையில் இருந்து வெளியே வந்த கணவர்.! உருக வைத்து நடிகை மகாலட்சுமி போட்ட பதிவு.!
தமிழில் லிப்ரா ப்ரொடக்ஷன் மூலம் நட்புன்னா என்னான்னு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்தவர் ரவீந்தர் சந்திரசேகர். இவர் பிரபல சின்னத்திரை நடிகையான மகாலட்சுமியை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளானது. ஆனாலும் அவர்கள் அதனை பொருட்படுத்தாமல் மகிழ்ச்சியாக, ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வீடியோக்கள் ஆகியவற்றை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தனர்.
இந்த நிலையில் தயாரிப்பாளர் ரவீந்தர் மீது 16 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டதாக புகார் எழுந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, அவர் இருமுறை ஜாமீன் மனு தாக்கல் செய்தார். ஆனால் அது தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். பின்னர் ரவீந்தர் ரூ.5 கோடிக்கான உத்தரவாதத்தை செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்நிலையில் நடிகை மகாலட்சுமி ஜாமீனில் வெளிவந்துள்ள தனது கணவருடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, 'எனக்கு புன்னகையை வரவழைக்க நீங்கள் எப்போதும் தவறியதில்லை. அனைவரின் அன்புக்கும் காரணம் நம்பிக்கைதான். ஆனால் இங்கு நம்பிக்கை என்னை விட உங்களை அதிகமாக நேசிக்கிறது. அதே அன்பை பொழிந்து முன்பு போல் என்னைக் காப்பாயாக.லவ் யூ’என பதிவிட்டுள்ளார்.