மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அந்த இயக்குனருடன் லிவிங் டுகெதர்.. அபார்சன் செய்தேன்.. பிரபல நடிகை கண்ணீர் குமுறல் பேட்டி.. ரசிகர்கள் கதறல்.!
பிரபல இயக்குனருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கையில் இருந்து, கருவை கலைத்ததாக நடிகை பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். விவாகரத்துக்கு பின்னர் நடிகையை புரட்சி பேசி ஏமாற்றி உல்லாசமாக இருந்து கைவிட்ட போலிப்போராளி இயக்குனர் யார் என்று தான் தெரியவில்லை என ரசிகர்கள் கொந்தளித்து இருக்கின்றனர்.
ஈரானிய நாட்டினை சேர்ந்த இந்திய திரைப்பட நடிகை மாட்டானா கரிமி. இவர் பல ஹிந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். திரைப்பட தொலைக்காட்சி தொடர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடித்து இருக்கிறார். இவர் கடந்த 2017-ல் கவுரவ் குப்தா என்பவரை திருமணம் செய்து, 2021-இல் விவாகரத்து பெற்றார்.
இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "ஊரடங்கு சமயத்தில் நான் எனது சமூக ஊடக பக்கங்களில் வராமல் அமைதியாக இருந்தேன். எனது விவகாரத்திற்கு பின்னர் நான் எந்த மனிதரையும் நம்பவில்லை. அதனைத்தொடர்ந்து, எனக்கு ரகசிய உறவு இருந்தது. நான் எனது குறிக்கோளில் இருந்து மாறி சென்றாலும், அந்த உறவு ஒன்றரை வருடம் நீடித்தது.
எனது ரகசிய உறவு பிரபலமான இயக்குனருடன் இருந்தது. அவர் பெண்களுக்கான உரிமை தொடர்பாக பேசுவதில் வல்லவர், பெண்களின் உரிமைக்கு குரல் கொடுப்பவர். பல இளம்தலைமுறை அவரை பெரிய இயக்குனராக நினைத்து பெருமிதம் கொள்கிறது. அவருக்கு பெற்றோர்கள் இல்லை. நான் விவாகரத்து பெற்று இருந்ததால், முதலில் நட்பாக தொடங்கிய பழக்கம் பின்னாளில் ரகசிய உறவு என சென்றது.
நட்பாக பேசி பின்னாளில் இருவரின் மனமும் ஒத்துப்போக, அவர் என்னை காதலிப்பதாக தெரிவித்தார். நானும், அந்த இயக்குனரை மெல்ல காதலிக்க தொடங்கினேன். நாங்கள் இருவரும் லிவிங் டுகெதர் முறையில் மிகவும் ரகசியமாக வாழ்ந்து வந்த நிலையில், குழந்தை கருவுற்றான். ஆனால், இயக்குனருக்கு ஏற்கனவே குழந்தை இருந்ததால், அவர் மீண்டும் என் குழந்தைக்கு தந்தையாக விரும்பவில்லை என்றார்.
எனக்கும் 33 வயது ஆனது. கருவை கலைக்கலாம் என திட்டமிட்டு நண்பர்கள், பெற்றோரிடம் ஆலோசித்து இறுதியில் அதனையும் செய்தேன். எனது தவறான முடிவுக்கு அவர்களிடம் வருத்தம் தெரிவித்தேன். அவர்கள் நீ மனதளவில் நம்பிக்கையுடன் இரு என ஆலோசனை தெரிவித்தார்கள்" என்று கூறினார்.
பிரபல நடிகையின் கண்ணீர் பேட்டி ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், யார் அந்த இயக்குனர் என்ற கேள்வியும் திரையுலக வட்டாரத்தை அதிர வைத்துள்ளது. எப்படியென்றாலும் இந்த விஷயம் சம்பந்தப்பட்ட இயக்குனரை பதற வைத்திருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.