மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட நடிகை மனிஷா கொய்ராலாவா இது... சிறு வயதில் எப்படி உள்ளார் என்று பாருங்கள்... வைரலாகும் புகைப்படம்!!
90 களில் கொடிக்கட்டி பறந்த முன்னணி நடிகைகளுள் ஒருவர் தான் நடிகை மனிஷா கொய்ராலா. இவர் தமிழில் பம்பாய் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படமே ரசிகர்கள் மத்தியில் மனிஷாவுக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதனை தொடர்ந்து இந்தியன், பாபா, முதல்வன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருந்தார்.
இந்நிலையில் மனிஷா கொய்ராலா திடீரென கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்ததால் சில காலம் சினிமா பக்கம் வராமல் இருந்தார். பின்னர் அவர் சற்று குணமானதும் தமிழ், மற்றும் ஹிந்தி திரைப்படத்தில் சிறு சிறு கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்து வந்தார்.
தற்போது நடிகை மனிஷா கொய்ராலாவின் சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனை பார்த்த நெட்டிசன்கள் என்ன ஒரு அழகு என கமெண்ட் செய்து வருகின்றனர்.