மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அம்மாவால தான் இப்படி நடந்துச்சு., நான் மிஸ் பண்ணிட்டேன் - மனமுடைந்து உண்மையை உடைத்த மீனா..!!
தனது திரையுலக வாழ்க்கை குறித்து நடிகை மீனா மனம்திறந்தார்.
தென்னிந்திய திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடித்து பிரபலமானவர் நடிகை மீனா. இவரின் கணவர் வித்தியாசாகர் சமீபத்தில் காலமானதை தொடர்ந்து தற்போது அதன் தாக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அவர் மீண்டு வருகிறார்.
இந்த நிலையில் தான் தவறவிட்ட ஹிட் படங்கள் குறித்து அவர் பேசினார். ரஜினிகாந்த் நடித்த படையப்பாவில் நீலாம்பரி கேரக்டரில் மீனாவை நடிக்கவைக்க இயக்குனர் மற்றும் ரஜினி விருப்பப்பட்ட நிலையில், மீனாவின் அம்மா நெகட்டிவ் கதாபாத்திரத்தை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என தவிர்த்து விட சொல்லி இருக்கிறார்.
அந்த கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் தற்போது வரை புகழ் பெற்றவராக இருந்தவரும் நிலையில், மீனாவுக்கு படம் வெளியான பின்னர் வருத்தம் ஏற்பட்டுள்ளது. வாய்ப்பு கிடைக்கும்போதே உபயோகித்திருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.