எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரத்தில் மட்டும் நடிக்கவே மாட்டேன்..! நடிகை மீனா.!



Actress meena regret to act as heros mother in movies

1991-ம் ஆண்டு வெளியான என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை மீனா. ஒருசில படங்களிலையே அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்ற மீனா, தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகைகளில் ஒருவராக மாறினார்.

ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், அஜித் என தமிழ் சினிமாவின் அணைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார் மீனா. சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த மீனா, திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகியே இருந்தார்.

meena

திருமணம் முடிந்து ஒரு குழந்தைக்கு தாயான நடிகை மீனா தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். இயக்குனர் சிவா இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துவரும் அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார் மீனா. மேலும், வெப் தொடர் ஒன்றிலும் மீனா நடித்துவருகிறார்.

இந்நிலையில், எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும், கதாநாயகனின் அம்மாவாக மட்டும் நடிக்க மாட்டேன் என்பதில் உறுதியாக உள்ளாராம் மீனா.  பிடித்தமான வேடங்கள் வந்தால், தொடர்ந்து நடிக்க மீனா முடிவு செய்து இருக்கிறாராம்.