மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உலக கோப்பையை அறிமுகம் செய்யும் முதல் தமிழ் நடிகை யார் தெரியுமா.?
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இம்முறை இந்தியாவில் நடைபெற இருக்கிறது. வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ள உலகக்கோப்பை போட்டிகளைக் காண ரசிகர்கள் மிகுந்த ஆவலாக உள்ளனர்.
இந்நிலையில், இந்த வருடத்திற்கான உலகக்கோப்பையை தமிழ் நடிகை மீனா, பாரிசில் அறிமுகம் செய்து வைத்துள்ளார். இந்தப் புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு, "உலகக்கோப்பையை அறிமுகம் செய்யும் முதல் இந்திய நடிகை" என்ற பெருமையைப் பெற்றுள்ளேன்.
"இந்த வெற்றிக்கோப்பையை அறிமுகப்படுத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது" என்றும் தன் பதிவில் மீனா கூறியிருக்கிறார்.
தற்போது இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகிறது. இந்தியாவில் வேறெந்த நடிகருக்கும் கிடைக்காத வாய்ப்பு, மீனாவுக்கு கிடைத்திருப்பதில் தமிழ் ரசிகர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.