அடேங்கப்பா.. என்னா எனர்ஜி! புஷ்பா பட பாடலுக்கு அம்மா நடிகை போட்ட ஆட்டத்தை பார்த்தீங்களா.! மிரட்டும் வீடியோ!!



actress-meera-krishnan-dance-to-pushpa-song

சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் தொடர் சித்தி 2. இந்த தொடரில் ஹீரோவான கவின் கதாபாத்திரத்தின் அம்மாவாக மல்லிகா என்ற வில்லி ரோலில் நடித்து மிரள வைத்து வருபவர் நடிகை மீரா கிருஷ்ணன்.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் தமிழும் சரஸ்வதியும் என்ற தொடரிலும் ஹீரோவான தீபக்கிற்கு அம்மாவாக நடித்து வருகிறார். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் மீரா கிருஷ்ணன் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிடுவார்.

இந்நிலையில் அவர் தற்போது புஷ்பா படத்தில் இடம் பெற்றுள்ள “சாமி சாமி“ பாடலுக்கு டான்ஸ் ஆடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது வைரலான நிலையில், அதனை கண்ட பலரும் அவரை பாராட்டியுள்ளனர். மேலும் அம்மாவாக நடிக்கும் நடிகையா இது! என்னா எனர்ஜி என வியந்து போயுள்ளனர்.