#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கர்ப்பமாக இருக்கும்போது கணவரை இழந்த நடிகை மேக்னா! பிக்பாஸ் வெற்றியாளருடன் மீண்டும் திருமணமா? வெடித்த உண்மை!!
கன்னட சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம்வந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜா தனது மனைவி நடிகை மேக்னா ராஜ் 4 மாத கர்ப்பமாக இருந்த நிலையில், திடீர் மாரடைப்பு ஏற்பட்டு கடந்த ஆண்டு ஜூன் 7ஆம் தேதி காலமானார். இவரது மறைவு திரையுலகினர் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து மேக்னா ராஜ் தனது குழந்தையின் பிறப்பை எதிர்பார்த்திருந்த நிலையில், அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. சிரஞ்சீவி சார்ஜாவே மீண்டும் பிறந்ததாக குடும்பத்தினர் பெருமகிழ்ச்சி அடைந்தனர். மேலும் அண்மையில் கூட குழந்தையின் பெயர் சூட்டுவிழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. மேக்னா தனது குழந்தைக்கு ராயன் ராஜ் சார்ஜா எனப் பெயரிட்டார்.
ನಾನ್ ನೋಡಿದ್ರೂ ignore ಮಾಡೋಣ ಅಂತಿದ್ದೆ!!
— Olle Hudga Pratham (@OPratham) September 14, 2021
But just one DAy ಲಿ 2.70 lakh views ಆಗಿದೆ!!
Views ಆಗ್ಲಿ,#ದುಡ್ಡಾಗ್ಲಿ ಅಂತ ಈ ಮಟ್ಟಕ್ಕೆ ಈ youtube channel ಇಳಿದಾಗ ಸ್ವಲ್ಪ ಕಾನೂನಾತ್ಮಕವಗಿ ನೋಡಬೇಕಗುತ್ತದೆ!@meghanasraj ಇಂತಹ ಒಂದುchannel ನ ನೀವು ಕಾನೂನಾತ್ಮಕವಗಿ delete ಮಾಡ್ಸಿದ್ರೆ ಇನ್ನಷ್ಟು ಜನ ಎಚ್ಚೆತ್ತುಕೊಳ್ತರೆ! pic.twitter.com/mJUSH5Nxrb
இந்நிலையில் நடிகை மேக்னா பிக்பாஸ் 4 கன்னட டைட்டில் வின்னரான பிரதாமை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள உள்ளதாக யூடியூப் சேனல் ஒன்றில் தகவல்கள் பரவி வந்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பிரதாம் மிகவும் காட்டமாக பதிலளித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், நான் இதை புறக்கணிக்கவே நினைத்தேன். ஆனால் இந்த செய்தி 2.70 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. யூடியூப் சேனல்கள் பார்வைகள் மற்றும் பணத்திற்காக மிகவும் தரக்குறைவாக இருக்கும்போது இதுக்குறித்து சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க நினைக்கிறேன். அப்போதுதான் அது மற்ற சேனல்களுக்கும் ஒரு பாடமாக அமையும் என ஆவேசமாக தெரிவித்துள்ளார்.