திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அடேங்கப்பா.. ரசிகர்களின் கவர்ச்சி கன்னி நமீதாவா இது?..! குழந்தை பிறந்த பின் எப்படி இருக்காங்க பார்த்தீங்களா?..!!
தமிழ் திரையுலகில் கடந்த காலங்களில் நடித்து பல இளைஞர்களின் கவர்ச்சி கன்னியாக இருந்து வந்தவர் நடிகை நமிதா. இவருக்கென ரசிகர் மன்றம், அதற்கான செயல்பாடுகள் என எப்போதும் இவரின் பெயர் அடிபட்டுக் கொண்டே இருக்கும்.
கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான அண்ணா படத்தில் கவர்ச்சி இல்லாமல் நடித்த நடிகை நமீதா, ஏய் படத்தில் மொத்த கவர்ச்சியையும் காட்டி ஆட்டம் ஆடினார். அவர் ஹாய் மச்சான்ஸ் என்று குழந்தைபோல தமிழில் உரையாடியது பலரையும் ரசிக்க வைத்தது.
இந்த நிலையில் அவர் உடல் எடை திடீரென அதிகரித்து அடையாளம் தெரியாமல் இருந்த நிலையில், மன அழுத்தத்தால் உடல் எடை அதிகரித்ததாக அவர் தெரிவித்திருந்தார். உடல் எடை கூடியதால் பட வாய்ப்புகள் இழந்த நமீதா மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவராகவும் கலந்து கொண்டார்.
பின் விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அங்கிருந்து வெளியேறினார். மேலும் வீரேந்திர சவுத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட நமிதாவுக்கு கடந்த ஆகஸ்டில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன.
கிருஷ்ணர் மீது தீவிர அன்பு கொண்ட நமிதா தனது மகன்களுக்கு கிருஷ்ணா ஆதித்யா, கியான்ராஜ் என்று கிருஷ்ணரின் பெயரை வைத்திருக்கிறார். குழந்தை பிறப்புக்கு பின்னர் வெளியே தலைகாட்டாமல் இருந்த அவர் அவ்வப்போது ரிலீஸ் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
அத்துடன் உடல் எடையை ஓரளவு குறைத்து தனது புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் அவர் மீண்டும் நடிக்க வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.