#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அட்டகத்தி பட நடிகைக்கு இப்படி சோகமா?. அரியவகை நோயால் பாதிப்பு.. சோகத்தில் ரசிகர்கள்.!
தமிழ் திரையுலகில் அட்டகத்தி திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமான நடிகை நந்திதா. அதனைத்தொடர்ந்து, எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுபட்டி, புலி, அஞ்சலை, ஈஸ்வரன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
இதனைதவிர்த்து பல தெலுங்கு படத்திலும் அவர் நடித்துள்ளார். இந்நிலையில், அட்டகத்தி திரையாட நடிகையான நந்திதா, சமீபத்தில் தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார்.
அவருக்கு பைப்ரோமியால்ஜியா என்ற அரியவகை தசை கோளாறு நோய் ஏற்பட்டுள்ள நிலையில், அதனால் உடல் எடை அவ்வப்போது குறைவதாகவும், கடினமான வேலைகளை செய்ய இயலாமல் தவிப்பதாகவும், சில நேரத்தில் நகரக்கூட இயலவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த தகவல் நந்திதாவின் ரசிகர்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் நந்திதாவின் உடல்நலத்தை கவனமாக பார்த்துக்கொள்ளுமாறு அறிவுரை கூறி வருகின்றனர்.