மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நானும் மனுஷி தான்!! நடிகை நந்திதாவிடம் நெட்டிசன்கள் கேட்ட அந்த மாதிரி கேள்வி.! கோபமாக அவர் கொடுத்த பதிலடியை பாருங்க..
அட்டகத்தி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை நந்திதா. அட்டக்கத்தி படத்தை அடுத்து இவர் நடித்த அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற நிலையில் இவர் தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கத்தக்க நடிகைகளில் ஒருவராக அவதாரம் எடுத்தார்.
பின்னர் சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். தற்போது அவரது கைவசம் எந்த படவாய்ப்புகளும் இல்லாததால் சமூக வலைத்தளங்களில் பயங்கர பிஸியாக இருந்து வருகிறார். இந்நிலையில் தனது கவர்ச்சியான புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை நந்திதா சமீபத்தில் வெளியிட்டிருந்த போட்டோ ஒன்றில் அவர் குண்டாக இருப்பதை நெட்டிசன்கள் கிண்டல் செய்தனர். அதில் நந்திதாவை ஒர்கவுட் செய்து உடலை ஷேப்பில் வைத்துக்கொள்ளும்படி அட்வைஸ் செய்து கமெண்ட் செய்த நிலையில் அதற்கு பதிலடி கொடுத்து இருக்கும் நந்திதா, நான் ஒன்றும் கடவுள் இல்லை. நானும் மனுஷி தான். நானும் சில விஷயங்களை கடந்து வருகிறேன். எப்படி மக்கள் இது போல எழுதுகிறார்கள். I love my body and I like this phase of my life, and how I look" என தெரிவித்து இருக்கிறார்.