திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தேர்தலில் களமிறங்கும் விஜயகாந்த் பட நடிகை! எந்த தொகுதியில் தெரியுமா?
நாடுமுழுவதும் வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர் நோக்கி காத்திருக்கிறது. அணைத்து கட்சிகளும் தங்களது கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அடுத்த மாதம் அதவது ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழத்தில் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் நடிகர் கருணாஸ் கதாநாயகனாக நடித்த படங்களில் ஒன்று ‘அம்பாசமுத்திரம் அம்பானி’. இந்தப் படத்தின் கருணாஸூக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை நவ்னித் கவுர். அதையடுத்து இவர் விஜயகாந்துக்கு ஜோடியாக ‘அரசாங்கம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் தமிழ் மற்றும் பல மொழிகளில், 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவரது சொந்த மாநிலம் மகாராஷ்டிரா. இவர் அமராவதி தொகுதி சட்டபை உறுப்பினர் ரவி ராணாவை திருமணம் செய்துள்ளார். நவ்னித் கவுரின் கணவர் ரவி ராணா யுவாபிமானி என்ற கட்சியையும் நடத்தி வருகிறார். திருமணத்திற்கு பிறகு நடிப்பில் கவனம் செலுத்தாமல் முழு நேர அரசியலில் இறங்கிவிட்டார் நவநீத்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ள யுவாபிமானி கட்சிக்கு அமராவதி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. சட்டசபை உறுப்பினாராக இருக்கும் ரவி ராணா, அமராவதி தொகுதியில் தன் மனைவி நவ்னித் கவுரை வேட்பாளராக அறிவித்துள்ளார். அமராவதி தொகுதியில் ஏற்கெனவே பல நல்ல திட்டங்களை செய்துள்ளார் ரவி ராணா. ஆகையால் நடிகை நவ்னீத் கவுர் வெற்றி பெறுவது உறுதி என்று கூறப்படுகிறது.