மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தல தீபாவளி கொண்டாடிய நயன்தாரா, விக்னேஷ் சிவன்! வைரலாகும் புகைப்படங்கள்!
ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. ஒன்றும் தெரியாத அப்பாவி பெண் போல் தோன்றிய நயன்தாரா இன்று லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார். விஜய், அஜித், சூர்யா, சிம்பு என அணைத்து தமிழ் சினிமா முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார் நயன்தாரா.
இவரது புகழ் எவ்வளவு வேகமாக வளர்ந்ததோ அதைவிட வேகமாக இவரைப்பற்றிய விமர்சனங்கள் அதிகமாகவே வளர்ந்தது. அதற்கு காரணம் நடிகர் சிம்புவுடன் ஏற்பட்ட காதல் மற்றும் பிரிவு. அதன் பிறகு நடிகருக்கும், நடன இயக்குனருமான பிரபு தேவாவுடன் ஏற்பட்ட சலசலப்பு போன்றவைதான் காரணம்.
அதன்பிறகு நானும் ரௌடிதான் பட இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் உள்ளார் நடிகை நயன்தாரா. இருவரும் இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லையென்றாலும் இருவரும் மிகவும் நெருக்கமாகத்தான் பழகி வருகின்றனர்.
பொதுவாக இவர்கள் இருவரும் ஒவ்வொரு பண்டிகை அல்லது இருவரின் பிறந்தநாளுக்கு வெளிநாட்டிலோ அல்லது அவரவர் வீட்டிலோ இருவர் மட்டுமே கொண்டாடுவது வழக்கம். ஆனால், இந்தாண்டு தீபாவளியை இவர்கள் இருவர் மட்டுமின்றி, இயக்குனர் அட்லீ, சிவகார்த்திகேயன், அனிருத், நிகழ்ச்சி தொகுப்பாளர் டிடி என தங்களுக்கு நெருக்கமானவர்களை மட்டுமே அழைத்து விருந்து கொடுத்துள்ளனர். அப்படங்களை அவர் இணையத்தில் பதிவேற்றியும் உள்ளார். படத்தை பார்த்த நெட்டீசன்கள், ‛தல தீபாவளி கொண்டாட்டமா?' என, கேள்வி எழுப்பியுள்ளனர்.
Fantastic diwali wit my lovely friends , thanks darlings had a wonderful time @VigneshShivN @Siva_Kartikeyan @anirudhofficial #Nayanthara @priyaatlee pic.twitter.com/dXotTC0ouD
— atlee (@Atlee_dir) November 7, 2018
Festival becomes beautiful wen u make best memories wit beautiful people 😍 To many more days of laughter love n togetherness to us 😘😘
— DD Neelakandan (@DhivyaDharshini) November 7, 2018
❤️ Happy Diwali ❤️ #FriendsLikeFamily @Siva_Kartikeyan @anirudhofficial @Nelson_director @Atlee_dir @priyaatlee @VigneshShivN LSS #Nayanthara pic.twitter.com/Cx9cHzEXGI