திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வில்லியாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்த பிரபல நடிகைகள்.!
சமீபகாலமாக திரைத்துறைக்கு தினமும் ஏராளமான புதுப் புது நடிகர்கள் மற்றும் நடிகைகள் வந்த வண்ணம் உள்ளனர். அதில் ஹீரோக்களுக்கு சமமாக வில்லன்களுக்கு முக்கியத்துவமும், ரசிகர்களும் அதிகரித்து வருகின்றனர்.
சில ஹீரோக்களும் நெகட்டிவ் ரோலில் நடித்து கவனத்தைக் கவர்ந்து வரும் நிலையில், நடிகைகளும் சிலர் நெகட்டிவ் ரோலில் நடித்து புகழ் பெற்றுள்ளனர். அவர்களில் சிலரது நடிப்பு இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. 2021ல் வெளியான "சக்ரா" திரைப்படத்தில் ரெஜினா, விஷாலுக்கு வில்லியாக நடித்து இருந்தார்.
முன்னதாக 1999ம் ஆண்டு பிளாக் பஸ்டர் படமான "படையப்பா"வில் ரஜினிக்கு வில்லியாக ரம்யா கிருஷ்ணன் பட்டையைக் கிளப்பியிருந்தார். அந்த "நீலாம்பரி" கேரக்டர் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. சமந்தா " தி பேமிலி மேன் 2" படத்தில் ராஜி என்ற நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார்.
"கொடி" படத்தில் த்ரிஷா, தனுஷுக்கு எதிரியாக நடித்திருந்தார். "பச்சைக்கிளி முத்துச்சரம்" படத்தில் ஜோதிகா, "புஷ்பா" படத்தில் அனுசுயா, "வல்லவன்" படத்தில் ரீமா சென் ஆகியோர் நெகட்டிவ் கேரக்டர்களில் நடித்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.