#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிகர் ஆதி - நிக்கி கல்ராணி கோலாகல திருமணம்....! அஜித் பாட்டுக்கு அசத்தல் டான்ஸ்...
தமிழில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த டார்லிங் படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி. அதனை தொடர்ந்து அவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மொட்டசிவா கெட்டசிவா மற்றும் அண்மையில் வெளிவந்த ராஜவம்சம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் மரகத நாணயம், யாகாவாராயினும் நாகாக்க ஆகிய படங்களில் நடித்த ஆதி மற்றும் நிக்கி கல்ராணி இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த மாதம் அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இந்நிலையில் நேற்று மே 18ம் தேதி நிக்கி கல்ராணி மற்றும் ஆதி இருவருக்கும் சென்னையில் கோளாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில் திருமணத்திற்கு முன்பு நடந்த ஹல்தி விழாவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. அந்த விழாவில் அஜித் நடித்த வேதாளம் படத்தில் வரும் ஆளுமா டோலுமா பாடலுக்கு ஆதி மற்றும் நிக்கிகல்ராணி நடனம் ஆடி இருக்கின்றனர். இதோ அந்த வீடியோ காட்சி....
Natural 🌟 #Nani & #SundeepKishan dance in joy at #AadhiPinisetty & #NikkiGalrani's haldi ceremony!! 🤩❤️@NameisNani @sundeepkishan @AadhiOfficial @nikkigalrani #TeluguFilmNagar pic.twitter.com/KXr7zuNheC
— Telugu FilmNagar (@telugufilmnagar) May 18, 2022