#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நட்சத்திர ஹோட்டலில் சாப்பிட சென்ற நடிகை நிலாவிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி.! வைரலாகும் ஷாக் வீடியோ!!
தமிழ்சினிமாவில் எஸ்ஜே சூர்யா நடித்து இயக்கிய அன்பே ஆருயிரே படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மீரா சோப்ரா. இவர் அதனை தொடர்ந்து ஜாம்பவான், லீ, மருதமலை, காளை என ஒரு சில படங்களில் நடித்துள்ளார். பின்னர் அவருக்கு தமிழில் சரியான படவாய்ப்புகள் கிடைக்காத நிலையில் அவர் தெலுங்கு மற்றும் பாலிவுட் சினிமாக்களில் நடித்து வருகிறார்.
மேலும் பிரியங்கா சோப்ராவின் உடன் பிறவா தங்கையான மீரா சோப்ரா. ஹாலிவுட் தொடர்களில் பெருமளவில் கவனம் செலுத்திவந்த நிலையில், சின்னத்திரை தொடர் ஒன்றில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை நிலா அகமதாபாத்தில் உள்ள டபுள் ட்ரீட் என்ற நட்சத்திர உணவு விடுதி ஒன்றிற்கு சாப்பிட சென்றுள்ளார். அங்கு தனக்குப் பிடித்த உணவை வரவழைத்த அவர் பசியில் ஒரு வாய் எடுத்து சாப்பிட்டுள்ளார். பின்னர் சாப்பாட்டு தட்டை கண்ட அவர் பெரும் அதிர்ச்சி அடைந்தார் ஏனெனில் அதில் உயிருடன் ஒரு புழு நெளிந்து கொண்டிருந்தது.
பின்னர் இதனை கண்டு ஆத்திரமடைந்த அவர் உணவு விடுதியில் கடுமையாக சண்டையிட்டுள்ளார். மேலும் இது குறித்த வீடியோவை தனது சமூக வலைத்தள இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள இவர் அகமதாபாத்தில் உள்ள டபுள் ட்ரீட் என்ற நட்சத்திர ஓட்டலில் தனக்கு வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் உள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் சுகாதாரமான உணவு கிடைக்கும் என்பதால் தான் அதிக அளவு செலவு செய்து இத்தகைய உணவு விடுதிகளுக்கு வருகிறோம். இங்கேயும் இப்படி செய்தால் என கோபமாக குறிப்பிட்டுள்ளார்.