மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என் அனுமதியில்லாமல் எப்படி இதை செய்யலாம்! சைபர் கிரைமில் அதிரடி புகாரளித்த பிரபல நடிகை! எதனால் தெரியுமா?
மேற்கு வங்கத்தை சேர்ந்த பிரபல பாலிவுட் நடிகை நுஸ்ரத் ஜெகன். இவர் கோகா 420, கில்லாடி, ஜமாய் 420, பவர், லவ் எக்ஸ்பிரஸ், அசூர் உள்ளிட்ட பல இந்திப் படங்களிலும், சில பெங்காலி படங்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி நுஸ்ரத் ஜெகன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் பஸ்ரிஹாத் தொகுதி எம்.பியாக உள்ளார்.
இந்நிலையில் அவரது படத்தை வீடியோ சாட் ஆப் நிறுவனம் ஒன்று அதன் விளம்பரத்தில் பயன்படுத்தியுள்ளது. இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த நுஸ்ரத் ஜெகன் இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
This is totally unacceptable - using pictures without consent. Would request the Cyber Cell of @KolkataPolice to kindly look into the same. I am ready to take this up legally. 🙏@CPKolkata https://t.co/KBgXLwSjR4
— Nusrat Jahan Ruhi (@nusratchirps) September 21, 2020
அதில் இணையதள சாட் செயலி ஒன்று அதன் விளம்பரத்தில் என்னுடைய படத்தை எனது அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளனர். இது ஏற்றுகொள்ளதக்கதல்ல. எனவே இதுகுறித்து விசாரணை செய்து அந்த சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரளித்துள்ளார். நடிகையின் அந்த புகாரை தொடர்ந்து போலீசார்கள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.