திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"நடித்தால், சிம்புவுடன் மட்டும் தான் நடிப்பேன்" அடம் பிடிக்கும் நடிகை..
டெல்லியை சேர்ந்த 30 வயதான நடிகை தேவயானி ஷர்மா. இவர் முதன் முதலில் லவ்ஷுடா (Loveshhuda) என்ற ஹிந்தி படம் மூலம் அறிமுகமானார். இந்தியாவில் இவர். அடுத்த படங்களை விட தெலுங்கு படங்களே இவருக்கு சினிமா வெளிச்சத்தை கொடுத்தது.
மேலும் தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஹிட் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். தெலுங்கில் பிரபலமான நடிகையாகவும் இருந்து வருகிறார் தேவயானி ஷர்மா.
இவ்வாறு ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து கொண்டிருக்கும் தேவயானி சர்மா தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் கவர்ச்சியான படங்களை வெளியிட்டு பிசியாக இருந்து வருகிறார்.
இது போன்ற நிலையில் அவர் "சிம்புவுடன் நடித்தே ஆக வேண்டும், அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். பிற மொழிகளில் நடித்தாலும் தமிழ் மொழியில் சிம்புவுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு எப்போதுமே இருந்து வருகிறது.
மேலும் "சாதாரண கதாநாயகியாக இல்லாமல் மக்களால் ரசிக்கும் கதாநாயகியாக வேண்டும். எனக்கு சாய் பல்லவி மற்றும் கீர்த்தி சுரேஷ் போன்ற நடிகைகள் போல நடிப்பில் ஈடுபட வேண்டும் என்ற ஆசை. எனக்கு முன்னுதாரணமாக இவர்கள் தான் இருக்கிறார்கள்" இவ்வாறு கூறியுள்ளார்கள்.
மேலும் சிம்பு தற்போது கோகுல் என்பவரது இயக்கத்தில் எஸ் டி ஆர் 48 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் தேவயானி சர்மாவும் நடிக்கப் போகிறாரா என்று ரசிகர்கள் இணையத்தில் கேள்வி கேட்டு வருகின்றனர்.