திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#Breaking: பிரபல தமிழ் நடிகை பார்வதி நாயர் காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்.. தொடர் மிரட்டல்., கண்ணீர் குமுறல்.!
தனது வீட்டில் வேலை பார்த்து வந்தவர் விலையுர்ந்த பொருட்களை திருடி சென்று தன்னை மிரட்டுவதாக நடிகை பார்வதி நாயர் புகார் அளித்துள்ளார்.
சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துவிட்டு வந்த பிரபல தமிழ் நடிகை பார்வதி நாயர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அந்த பேட்டியில், "எனது வீட்டில் தொடர்ந்து விலையுயர்ந்த பொருட்கள் திருடுபோய் கொண்டு இருந்தது.
இதனால் நான் கண்காணிக்க தொடங்குகையில், வீட்டில் வேலை பார்த்து வந்தவரே திருட்டு செயலில் ஈடுபட்டது உறுதியானது. என்னை அவர் தொடர்ந்து மிரட்டி வருகிறார். பல நாட்களாக தொடர்ந்து வந்ததால், நான் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கிறேன். அதனால் காவல் ஆணையர் அலுவலகத்தில் நான் புகார் அளித்துள்ளேன்.
காவல் துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். நான் குற்றச்சாட்டை முன்வைத்த நபரின் மீது குற்ற வழக்குகள் இருக்கின்றன என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. காவல் துறையினர் விரைந்து அவரை கைது செய்ய்வதாக உறுதி அளித்தனர்" என்று பேசினார்.