மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட இந்த சின்ன குழந்தை எந்த நடிகை தெரியுமா.? இப்படி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே.!
மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் பார்வதி திருவேட்டு. இவர் மலையாளத்தில் பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாகவும் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார் பார்வதி திருவேத்து.
மேலும் தமிழ் சினிமாவில் முதன் முதலில் பூ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானார். முதல் படத்திலேயே இவரது நடிப்பு பாராட்டப்பட்டு வந்தாலும் இப்படம் பெரிதளவில் வெற்றி பெறவில்லை. இப்படத்திற்குப் பிறகு தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் பார்வதி.
பார்வதி தமிழ் சினிமாவில் பெங்களூரு நாட்கள், சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும், மரியான், சென்னையில் ஒரு நாள் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஹிந்தி திரையுலகில் காலடியெடுத்து வைத்து தனது நடிப்பு திறமையை காட்டி வருகிறார்.
இது போன்ற நிலையில் சமூக வலைதளங்களில் பார்வதியின் சிறு வயது புகைப்படம் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்புகைப்படம் பார்த்து ரசிகர்கள் பார்வதியா இது என்று ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.