மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"சூப்பர் ஸ்டார் என்று சொல்வதில் என்ன இமேஜ் இருக்கிறது" நடிகை பார்வதியின் காட்டமான கேள்வி.!
2006ம் ஆண்டு "அவுட் ஆப் சிலபஸ்" என்ற மலையாளப் படத்தில் அறிமுகமானவர் பார்வதி திருவோத்து. தொடர்ந்து நோட்புக், வினோதயாத்ரா, பெங்களூரு டேஸ், சார்லி, கூடே, உயரே, வைரஸ், ஹலால் காதல் கதை, வர்த்தமானம், ஆணும் பெண்ணும் உள்ளிட்ட பல மலையாளப் படங்களில் நடித்துள்ளார்.
மேலும் சசி இயக்கத்தில் 2008ம் ஆண்டு தமிழில் வெளியான "பூ" திரைப்படத்தில் மாரி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். மேலும் இந்தப் படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வென்றுள்ளார். மேலும் புதுமுக நடிகைக்கான விஜய் டிவி விருதையும் வென்றுள்ளார்.
மேலும் இவர் தமிழில் மரியான், சென்னையில் ஒரு நாள், உத்தம வில்லன், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் எப்போதும் பெண்களுக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில், "சூப்பர் ஸ்டார் பட்டத்தில் அப்படி என்ன இருக்கிறது? நானெல்லாம் சூப்பர் ஆக்டர் என்று சொன்னால் தான் சந்தோஷப்படுவேன். சூப்பர் ஸ்டார் என்று சொல்வதில் என்ன இமேஜ் இருக்கிறது? மலையாளத்தில் சூப்பர் ஆக்டராக பகத் பாசில் உள்ளார்" என்று பார்வதி கூறியுள்ளார்.