மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
படத்துக்கு 300 ரூபாய் சம்பளம் வாங்கிய முன்னணி நடிகை! யார் தெரியுமா?
2008-ம் ஆண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான பொய் சொல்ல போறோம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பியா பாஜ்பாய், ஏகன் , கோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதன் பின்னர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான கோவா திரைப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானார் பியா.
அதன்பின்னர் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற கோ படத்தில் ஜீவாவுக்கு தோழியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பின்னர் ஒருசில தமிழ் படங்களிலும், ஹிந்தி, மலையாளம் படங்களிலும் நடித்துள்ளார் பியா.
குறிப்பிட்ட இடைவெளிக்கு பிறகு இவர் என்ன ஆனார் என்று தெரியாமல் இருந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தான் வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு, என்ன வேலை பார்த்து அந்த சம்பளத்தை வாங்கினேன் என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.
அதன்படி இவர் முதன் முதலில் வாங்கிய சம்பளம் 300 ரூபாயாம். அதுவம் ஒரு படத்தில் 2 வரி டப்பிங் பேசி இந்த பணத்தை சம்பாதித்தாக பியா கூறியுள்ளார். நீங்களும் உங்களது முதல் சம்பளம் பற்றி கீழே உள்ளே கமெண்ட் பாக்சில் பதிவிடுங்கள்.
My first job in Mumbai was to dub for some one where I got 300 rs. as a remuneration for 2 lines..what was urs ? #myfirstjob
— Pia Bajpiee (@PiaBajpai) March 6, 2019