மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அழகு அள்ளுது... மனசுக்குள்ள சடுகுடு சடுகுடு... நடிகை பிரியங்கா மோகனின் கிளாமர் லுக் போட்டோஷூட் வீடியோ இதோ...!
தெலுங்கு சினிமாவில் வெளியான கேங் லீடர் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் நடிகை பிரியங்கா மோகன். அதனை தொடர்ந்து தமிழில் களமிறங்கிய அவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற டாக்டர் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு அவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உருவாகினர்.
அதைத் தொடர்ந்து பிரியங்கா மோகன் பிரியங்கா மோகன் சூர்யாவுடன் இணைந்து நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் திரைக்கு வந்துள்ளது . மேலும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பிரியங்கா மோகன் நடித்துள்ள டான் திரைப்படம் வருகிற மே மாதம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் குறுகிய காலத்தில் பிரபல நடிகையாக வலம் வரும் அவருக்கு தொடர்ந்து பல பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் பிரியங்கா மோகன் அவ்வப்போது தனது வித்தியாசமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது மார்டன் உடையில் கொள்ளை அழகில் பிரியங்கா மோகன் நடத்திய போட்டோஷூட் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.