மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னது.. பாக்கியலட்சுமி தொடரில் இனி புதிய கோபியாக நடிக்கபோவது இந்த நடிகரா?? வெளிவந்த தகவல்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று நாளுக்கு நாள் சுவாரஸ்யமாக, விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் தொடர் பாக்கியலட்சுமி. இந்த தொடரில் கோபி தனது மனைவியான பாக்கியலட்சுமியை விவாகரத்து செய்து விட்டு, முன்னாள் காதலியான ராதிகாவை திருமணம் கொண்டு பெரும் அல்லல் பட்டு வருகிறார். இதில் கோபி கதாபாத்திரத்தில் நடிகர் சதீஷ் மிகவும் சிறப்பாக நடித்து வந்தார்.
மேலும் இதில் முன்னாள் மனைவி பாக்கியலட்சுமியாக சுஜித்ரா என்ற கன்னட நடிகையும், இரண்டாம் மனைவியாக ரேஷ்மா பசுபெல்தியும் நடித்து வருகின்றனர். சதீஷ் கோபி கதாபாத்திரத்தில் அற்புதமாகவும், தத்ரூபமாகவும் நடித்திருப்பார். இதனால் அவர் பாராட்டை பெற்றாலும், ரசிகர்களிடம் திட்டும் வாங்கியுள்ளார்.
இந்நிலையில் நடிகர் சதீஷ் தனது சொந்த குடும்ப பிரச்சினை காரணமாக பாக்கியலட்சுமி தொடரை விட்டு விலகுவதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது அவருக்கு பதிலாக கோபி கதாபாத்திரத்தில் ப்ருத்விராஜ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அவர் இதற்கு முன்னர் சன் டிவியில் கண்ணான கண்ணே தொடரில் நடித்திருந்தார். ஆனால் அவர் பாக்கியலட்சுமி தொடரில் நடிப்பது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளிவரவில்லை.