53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
பிரிந்த கணவர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற நிலையில், நடிகை ரச்சிதா போட்ட எமோஷலான பதிவு.! ஆறுதல் கூறும் ரசிகர்கள்!!
விஜய் டிவியில் பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரில் நடித்து அறிமுகமானவர் நடிகை ரச்சிதா.தொடர்ந்து அவர் மக்கள் மத்தியில் பிரபலமான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்தார். அதில் ஹீரோக்கள் மாறினாலும் பல சீசன்களிலும் அவரே மீனாட்சியாக நடித்து மக்களின் மனதை கவர்ந்தார்.
நடிகை ரச்சிதா பிரிவோம் சந்திப்போம் தொடரில் தன்னுடன் நடித்த நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர்கள் சில ஆண்டுகளாகவே பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையில் ரச்சிதா பிக்பாஸ் சீசன் 6ல் கலந்து கொண்டார்.
இந்நிலையில் நடிகை ரச்சிதாவின் தந்தை உடல்நலம் சரியில்லாமல் இருந்தநிலையில் சில தினங்களுக்கு முன்பு பெங்களூரில் காலமானார். மேலும் ரச்சிதாவை பிரிந்து வாழ்ந்து வரும் அவரது கணவர் தினேஷ் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
இந்நேரத்தில் ரச்சிதா தனது அப்பா மறைந்து 11வது நாள் சடங்கில், அப்பாவின் புகைப்படத்திற்கு முன்பு நின்று தனது அம்மாவின் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு "எனக்கு நீ உனக்கு நான்" என உருக்கமாக பதிவிட்டுள்ளார். இதனை கண்ட பிரபலங்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.