மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"பாக்யராஜ் முகத்தை என்னால் பார்க்கவே முடியாது" பேட்டியில் மனம் திறந்த ராதிகா..
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் பாக்யராஜ். இவர் இயக்குனர், நடிகர் போன்ற திறமைகளை கொண்டவர். இவர் ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்து அவரே இயக்கி, அவரே தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார். இப்படம் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது.
மேலும், இவர் நடிப்பில் வெளியான முந்தானை முடிச்சு, அந்த ஏழு நாட்கள் போன்ற பல படங்கள் மிகப்பெரும் ஹிட்டானது. இவர் நடிப்பின் மூலம் மக்கள் மனதில் இடம்பெற்று இன்று வரை நிலைத்து நிற்கிறார்.
இதன்படி பாக்யராஜுடன் நடித்த நடிகை பூர்ணிமா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு குணசித்திர கதாபாத்திரங்களில் திரைப்படங்களில் நடித்து வருகிறார் பாக்கியராஜ்.
இது போன்ற நிலையில் பிரபல நடிகை ராதிகா, பாக்யராஜுடன் நடித்த அனுபவங்களை பேட்டியில் கூறியிருக்கிறார். "தாவணி கதவுகள் திரைப்படத்தில் நடிக்கும் போது என்னால் பாக்யராஜின் முகத்தை பார்க்கவே முடியாது. பார்த்தாலே சிரித்து விடுவேன். இதனாலேயே பாக்யராஜை நேருக்கு நேர் பார்க்காமல் அந்த படம் முழுவதுமாக நடித்திருப்பேன்" என்று பேட்டியில் கூறினார்.