#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிகை ராகவியின் கணவர் தூக்கிட்டு தற்கொலை! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்!
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் ஆண் நபர் ஒருவர் தூக்கில் தொங்கியபடி கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், அவர் சின்னத்திரை நடிகை ராகவியின் கணவர் சசிகுமார் என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து நடிகை ராகவிக்கு தகவல் கொடுக்கப்பட்டு விரைந்து வந்த ராகவி, அவர் தனது கணவர்தான் என்று அடையாளம் காட்டினார். பல வருடங்களுக்கு மேலாக வெள்ளித்திரையிலும் , சின்னத்திரையிலும் தனக்கென தனி அடையாளத்தை வைத்திருக்கும் நடிகை தற்போது ராகவி சீரியல்களில் நடித்து வருகிறார்.
பிரபல தொலைக்காட்சியில் மஹாலட்சுமி, தமிழ்செல்வி போன்ற தொடர்களிலும் முக்கிய கதாபாத்திரமாக நடித்துவருகிறார் ராகவி. இவரது கணவர் சசிகுமார் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி வந்துள்ளார்.
கடன்சுமை காரணமாக, இவர் பணிபுரிந்த ஸ்டூடியோவிற்கு சொந்தமான கேமராவை, அடகு வைத்து விட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் அவருடன் பணிபுரிந்த மகேஷ் என்பவருடன் தொழில் ரீதியாக பிரச்னை இருந்ததாகவும், அதனால், சசிகுமாரை, ‘கேமரா திருடன்’ என வாட்ஸப்பில் தகவல் பரப்பி கணவனை அசிங்கப்படுத்தியுள்ளார். இதனால் தான் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டதாக மனைவி ராகவி கண்ணீருடன் கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.