#Breaking: இந்தியை திணிக்கிறோமா? அரசியல் செய்யாதீங்க - மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான் பரபரப்பு விளக்கம்.!  



central-minister-dharmendra-pradhan-answer-to-tn-cm-mk


மத்திய அரசு அமல்படுத்தியுள்ள புதிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றன. இதுதொடர்பான போராட்டங்கள், நூதன எதிர்ப்புகள் தொடர்ந்து வருகிறது. புதிய கல்விக்கொள்கை வாயிலாக எந்த மொழியையும் மாணாக்கர்கள் பயிலும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. 

ஆனால், இதன் வாயிலாக ஹிந்தி மொழியை மத்திய அரசு தமிழ்நாட்டுக்குள் திணிக்கிறது என குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. புதிய கல்விக்கொள்கை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு பின்வாங்கிய காரணத்தால், மத்திய அரசு சில நிதிகளையும் நிறுத்தி வைத்ததாக திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு குற்றம் சாட்டியது.

இதையும் படிங்க: #Breaking: தினகரன் ஆபிஸை கொளுத்திய திமுக, கருத்து சுதந்திரத்தை பேசலாமா? - தமிழிசை காட்டம்.!

அரசியல் ஆக்க வேண்டாம்

இந்நிலையில், தமிழ்நாட்டில் கல்வியை அரசியலாக்க வேண்டாம் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தரேந்திர பிரதான், தமிழ்நாடு முதல்வருக்கு கடிதம் எழுதி இருக்கிறார். புதிய கல்விக்கொள்கையில் தமிழக அரசின் பார்வையில் குறைபாடு உள்ளது. மாணவர்களின் எதிர்கால நலனோடு விளையாட வேண்டாம். மாணவர்களின் எதிர்காலத்தை வீணாக்க வேண்டாம். இந்த விஷயத்தை அரசியல் ஆக்க வேண்டாம். அரசியல் நோக்கத்திற்காக அச்சுறுத்தும் வகையில் திமுக அரசு தெரிவிக்க வேண்டாம். 

பிரதமர் நரேந்திர மோடி தமிழ் மொழியை உலகெங்கும் பரப்பி வருகிறார். உலகத்தரத்தில் இந்திய மாணவர்களை தயார் செய்ய புதிய கல்விக்கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு மொழியை படிக்கச் வேண்டும் என்பதுதான் அதன் சாராம்சம். இதில் ஹிந்தி திணிப்பு என்பது எந்த மாநிலத்திற்கும் இல்லை. அது மொழிப்பாடமாக மட்டுமே இருக்கும்" எனவும் மத்திய அமைச்சர் தர்மேந்திரா பிரதான கூறியுள்ளார். 

இதையும் படிங்க: நாங்க ரிப்போர்ட் கொடுக்கட்டுமா? முதல்வர் ஸ்டாலின் மீது இயக்குனர் பா. ரஞ்சித் காட்டம்.!