#Breaking: பிஎம் ஸ்ரீ திட்டம்.. ரூ.5000 கோடி இழப்பு.. மத்திய அமைச்சர் போட்டுடைத்த உண்மை.. தமிழ்நாட்டுக்கு ஷாக்.!



PM Shri Scheme Tamilnadu Govt Neglections Dharmendra Pradhan


மத்திய அரசு அமல்படுத்தியுள்ள புதிய கல்விக்கொள்கையை பல்வேறு மாநிலங்கள் ஏற்றுக்கொண்ட நிலையில், தமிழ்நாடு, கேரளா உட்பட சில மாநிலங்கள் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. மேலும், புதிய கல்விக்கொள்கை வாயிலாக அரசுப்பள்ளிகளில் ஹிந்தி திணிக்கப்படுகிறது என தமிழ்நாடு அரசு தொடர்ந்து வாதம் செய்து, மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. 

இன்று காலை மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழ்நாட்டில் கல்வியை அரசியலாக்க வேண்டாம். புதிய கல்விக்கொள்கையில் தமிழக அரசின் பார்வையில் குறைபாடு உள்ளது. மாணவர்களின் எதிர்கால நலனோடு விளையாட வேண்டாம். மாணவர்களின் எதிர்காலத்தை வீணாக்க வேண்டாம். இந்த விஷயத்தை அரசியல் ஆக்க வேண்டாம். அரசியல் நோக்கத்திற்காக அச்சுறுத்தும் வகையில் திமுக அரசு தெரிவிக்க வேண்டாம். 

ஹிந்தி திணிப்பு இல்லை

பிரதமர் நரேந்திர மோடி தமிழ் மொழியை உலகெங்கும் பரப்பி வருகிறார். உலகத்தரத்தில் இந்திய மாணவர்களை தயார் செய்ய புதிய கல்விக்கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு மொழியை படிக்கச் வேண்டும் என்பதுதான் அதன் சாராம்சம். இதில் ஹிந்தி திணிப்பு என்பது எந்த மாநிலத்திற்கும் இல்லை" என அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இதையும் படிங்க: #Breaking: 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை., பள்ளி, மதுபானக்கடை சூறையாடல்.. புதுச்சேரியில் பதற்றம், சாலை மறியல்.!

இந்நிலையில், பிஎம் ஸ்ரீ திட்டத்தை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவிக்கும் காரணத்தால், தமிழ்நாடு அரசு ரூ.2500 கோடியை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தமாக ரூ.5000 கோடி நிதியை இழக்கிறது. இதனால் மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய பல்வேறு முன்னேற்றம் மிகுந்த கல்வித்திட்டங்கள் பாதிக்கப்படும்.

8ம் வகுப்பு வரையில் தாய்மொழி கல்வி

பிஎம் ஸ்ரீ திட்டம் மாணவர்களிடையே கல்வியை அறிவியலாக பயிற்றுவிக்கும் திட்டம் ஆகும். உலகளாவிய தன்மை கொண்ட திட்டத்தை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. பிஎம் ஸ்ரீ திட்டத்தின் வாயிலாக 8ம் வகுப்பு வரையில் மாணவர்கள் தங்களின் தாய்மொழியிலேயே கல்வி கற்க வேண்டும் என்ற விஷயத்தையும் உறுதி செய்கிறது. அரசியல் காரணத்துக்காக தமிழ்நாடு அரசு மாணவர்களின் நலனுடன் விளையாடுவதை தவிர்க்க வேண்டும்" என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான் அறிவிப்பு வெளியிட்டு, தமிழ்நாடு அரசுக்கு புதிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ள கோரிக்கை வைத்துள்ளார்.

இதையும் படிங்க: எச்சில் உமிழ்ந்த நீரை கொடுத்து ராகிங் கொடுமை; கல்லூரி மாணவர்கள் 7 பேர் சஸ்பெண்ட்.!