திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"என்னைப்பார்த்து பிட்டு பட நடிகை என்கிறார்கள்" - ரசிகர்களின் கருத்தால் கண்ணீரில் பிரபல நடிகை.!
ஹிந்தி திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ராஜ் ஸ்ரீ தேஷ்பாண்டே. இவர் நெட்பிலீக்சில் வெளியான ஸ்கேர்ட் கேம்ஸ் தொடரில் நவாசுதின் சித்திக்கின் மனைவியின் சபத்ரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த தொடரில் வெளியான காட்சிகள் கவர்ச்சியாக இருந்தன. இதனை கூடுதலாக மாபிங் செய்த கும்பல், அதனை அவதூறாக சமூகவலைத்தளங்களில் அவதூறாக பரப்பி இருக்கிறது.
இதனால் நடிகை ராஜஸ்ரீயை பலரும் ஆபாச பட நடிகை என வர்ணிக்க தொடங்கி உள்ளனர். இதனால் தான் மனரீதியாக வருத்தப்பட்டு துயரத்தில் இருப்பதாக நடிகை வருத்தம் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த காட்சியை படம் எடுத்த இயக்குனர், என்னுடன் நடித்த நடிகர் என யாரையும் கேட்காதவர்கள், என்னை மட்டும் அப்படி கூறுவது ஏனோ? என கேள்வியை முன்வைத்துள்ளார்.