மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ்.. நடிகை ரம்பா வீட்டில் கோலாகலமாக நடந்த கொண்டாட்டம்! அவருக்கு இவ்ளோ பெரிய பிள்ளைகளா.! வைரலாகும் வீடியோ!!
தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டங்களில் ரஜினி, கார்த்திக்,விஜய்,அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து ஏராளமான படங்களில் நடித்து டாப் நடிகையாக வலம் வந்தவர் ரம்பா. இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்த அவர் தொடையழகி என அழைக்கப்பட்டார். இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில் நடிகை ரம்பா கடந்த 2010ஆம் ஆண்டு கனடாவை சேர்ந்த தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரு மகள்கள் மற்றும் ஒரு மகன் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் ரம்பா அவ்வப்போது தனது குடும்ப புகைப்படங்களை பகிர்வார். இந்நிலையில் அண்மையில் தனது மகனின் 4வது பிறந்தநாளை அவர் மிகவும் கோலாகலமாக கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது.