மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு இவ்வளவு பெரிய மகனா? வைரலாகும் புகைப்படம்!
தமிழ் சினிமவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரம்யா கிருஷ்ணன். 90 இல் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த இவர் தற்போது பல்வேறு மொழிப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கனடா என ஏகப்பட்ட படங்கள் இவரது கையில் உள்ளது.
இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தில் ராஜ மாதாவாக இவர் நடித்த கதாபாத்திரம் இந்திய அளவில் வரவேற்பை பெற்று இவருக்கு பேரும், புகழும் தேடி தந்தது. சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த இவர் 2003ஆம் ஆண்டு கிருஷ்ணா வம்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ரித்விக் என்ற மகன் உள்ளார்.
பொதுவாக எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் தனது மகனை அழைத்துச்செல்லாத ரம்யா கிருஷ்ணன் முதல் முறையாக தனது மகனை விருது வழங்கும் விழா ஒன்றிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.