திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
என்னது 50 வயசு ஆயிடுச்சா? குடும்பத்துடன் தனது 50 வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ரம்யா கிருஷ்ணன்.
நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது 50 வது பிறந்தநாளை தனது குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளநிலையில் அவரது புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். படையப்பா படத்தில் இவர் நடித்த நீலாம்பரி என்ற கதாபாத்திரம் இன்றுவரை ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்றாக உள்ளது. அந்த அளவிற்கு தனது நடிப்பு திறமையால் ரசிகர்களை கவர்ந்துள்ளார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.
1970-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி பிறந்த இவர் தனது 14-வது வயதில் வெள்ளை மனசு என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அன்றில் இருந்து இன்றுவரை தமிழ், மலையாளம், தெலுங்கு என பல்வேறு மொழிப்படங்களில் நடித்துவருகிறார் ரம்யா கிருஷ்ணன்.
குறிப்பாக இவர் நடித்த பாகுபலி திரைப்படம் இந்திய அளவில் இவரை புகழின் உச்சத்திற்கே அழைத்துச்சென்றது என்றே கூறலாம். சினிமாவில் ஒருபுறம் பிஸியாக இருந்தாலும் 2003-ம் ஆண்டு பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி என்பவரை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையிலும் கவனம் செலுத்த தொடங்கினார் ரம்யா கிருஷ்ணன்.
இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் ரம்யா கிருஷ்ணன் தனது 50 வது வயதை எட்டியுள்ளநிலையில் அதை தனது குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். மேலும் அந்த புகைப்படங்களை தனது சமூகவலைத்தள பக்கத்திலும் வெளியிட்டுள்ளார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.
புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள், என்னது ரம்யா கிருஷ்ணனுக்கு 50 வயது ஆகிவிட்டதா என ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்துவருகின்றனர்.