#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இதனால்தான் எனக்கு வாய்ப்புகள் வருவதில்லை! வருத்தத்தில் பிரபல நடிகை!
குள்ளநரி கூட்டம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ரம்யா நம்பீசன். பின்னர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பீட்ஸா திரைப்படத்திலும், அதை தொடர்ந்து சேதுபதி படத்திலும் நடித்திருந்தார் ரம்யா நம்பீசன். இவர் வெறும் நடிகை மட்டும் அல்ல நல்ல பாடகரும் கூட. பின்னணி பாடகியான இவர் பல்வேறு படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.
இந்நிலையில் கடந்த நான்கு வருடங்களாக தனக்கு எந்த வாய்ப்பும் வருவது இல்லை என்று வருத்தத்துடன் கூறியுள்ளார் ரம்யா நம்பீசன். அதற்கு காரணம் இதுவாகா கூடஇருக்கலாம் என்கிறார். பிரபல பாடகரான இவர் கேரளாவைச் சேர்ந்தவர். தற்போது, கோலிவுட், பாலிவுட் திரைத்துறையில் மீடூ புகார்கள் அதிகம் பேசப்பட்டு வருவதைப்போலவே, மலையாள சினிமாவில் கடந்த ஆண்டு இப்பிரச்சனை உருவாகியது.
இதனையடுத்து, மலையாள சினிமா துறையில் உள்ள பெண்களுக்காக ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் பெண்களுக்கு ஆதரவாக பேசிய நம்யா நம்பீசன் “இப்படி பெண்களுக்கு எதிராக சினிமா துறையில் நடக்கும் விஷயங்கள் பற்றி கேள்வி கேட்டதால் எனக்கு நான்கு ஆண்டுகளாக வாய்ப்புகள் இல்லை” என தெரிவித்துள்ளார்.