ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
வாவ்!! எஞ்சாய் எஞ்சாமி பாடலுக்கு இப்படி ஒரு ஆட்டம் போட்ட பிரபல நடிகை!! வைரல் வீடியோ..
என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு நடிகை ராசிக்கண்ணா போட்ட செம டான்ஸ் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
தமிழகத்தில் இன்று பலருக்கும் தூக்கத்தில் கூட மனதிற்குள் கேட்கும் ஒரு பாடலாக மாறிவிட்டது என்ஜாய் எஞ்சாமி பாடல். அசத்தலான இசை, அற்புதமான குரல், அழகான படப்பிடிப்பு என்று அனைத்தும் மிகவும் பிரமாண்டமாக இருக்கும் இந்த பாடல் தற்போது பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பி வருகிறது.
இதில் மேலும் சிறப்பு என்னவென்றால், ரசிகர்களையும் தாண்டி சினிமா பிரபலங்களையும் கூட இந்த பாடல் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த பாடல் குறித்து சமீபாத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த நடிகர் சூர்யா, "பாடல் மிகவும் அற்புதமாக இருப்பதாகவும், பாடலை ரிப்பீட் மோடில் போட்டு திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டிருப்பதாகவும் கூறியிருந்தார்".
மேலும் பல்வேறு சினமா பிரபலங்களும் இந்த பாடலை பாராட்டி வருகின்றனர். குறிப்பாக டாப் நடிகைகள், என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு தாங்கள் நடனமாடும் வீடியோவை வெளியிட்டு இந்த பாடலை இன்னும் பிரபலமாக்கிவருகின்றனர்.
அந்த வகையில், தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவரான ராசிக்கண்ணா என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு மிகவும் அற்புதமாக நடனமாடிய தனது வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வீடியோவை பார்க்கும் ரசிகர்கள், பாடல் அளவுக்கு உங்கள் நடனமும் சூப்பராக உள்ளது என கமெண்ட் செய்துவருகின்றனர்.