திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் விவகாரம்; நடிகை ரெஜினா தரமான பதில்.!
திரையுலகில் நடிக்க வாய்ப்புத்தேடும் நடிகைகள், திரைக்கு அறிமுகமாகும் இளம்பெண்கள் ஆகியோரை படக்குழு, படத்தயாரிப்புக்குழு படுக்கைக்கு அழைத்த கொடுமைகள் நடந்து வந்தன.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு Me Too இயக்கத்தின் மூலமாக இவை தொடர்பான உண்மைகள் அம்பலமாகி பல முகத்திரைகளை கிழித்து எரிந்தன.
இந்நிலையில், நடிகை ரெஜினா இதுகுறித்து கூறுகையில், "பாலியல் தொல்லை என்பது சினிமாவில் இருந்து வருகிறது. சில வாய்ப்புக்காக அட்வான்டேஜ் எடுக்கிறார்கள்.
இந்த சூழலை நடிகையான நாம் தைரியமாக எதிர்க்க வேண்டும். நடக்கும் விஷயத்தை வெளியில் சொல்ல தயக்கம் கூடாது. தைரியமாக எதிர்க்க வேண்டும். வாய்ப்புக்காக எதையும் செய்யவேண்டும் என அவசியம் இல்லை" என்று கூறினார்.