திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
எனக்கு திருமணமா?.. நம்பாதீங்க - திருமணம் குறித்த செய்திகளுக்கு காட்டம் தெரிவித்த பாக்கியலட்சுமி ராதிகா.!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி நெடுந்தொடரில் ராதிகா கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா. இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் தொடரிலும் நடிக்கிறார்.
சில நாட்களுக்கு முன்பு திருமண கோலத்தில் ரேஷ்மா வெளியிட்ட புகைப்படங்கள் வைரலான நிலையில், இவர்தான் உங்களது கணவரா? என்று விமர்சனம் செய்து வந்தனர். இந்நிலையில் லைவ் வீடியோவில் பேசிய நடிகை ரேஷ்மா, "அது போட்டோ சூட். கடந்த ஓராண்டுக்கு முன்னதாக எடுக்கப்பட்டது.
எனக்கு திருமணம் நடைபெற்றதாக செய்திகளை வெளியிடுகிறார்கள். இதை நம்ப வேண்டாம். என்னை பற்றி தவறு பேசுபவர்கள் குறித்து எனக்கு எந்த கவலையும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.