திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இந்த குட்டி குழந்தை யார் தெரியுமா? அட இந்த நடிகையா?! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!
தற்போது ஆந்திர சட்டமன்ற உறுப்பினராகவும், சுற்றுலாத்துறை அமைச்சராகவும் இருப்பவர் ரோஜா செல்வமணி. இவர் 1992ம் ஆண்டு ஆர்.கே.செல்வமணிஇயக்கிய "செம்பருத்தி" படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து சூரியன், உழைப்பாளி, அதிரடிப்படை என பல படங்களில் நடித்துள்ளார்.
90களின் முன்னணி கதாநாயகர்களான ரஜினி, சரத்குமார், விஜயகாந்த், பிரபு ஆகியோருடன் நடித்து அப்போது முன்னணி நடிகையாக வலம் வந்த ரோஜா, கடைசியாக 2015ம் ஆண்டு "என் வழி தனி வழி" என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
2000களில் முன்னணி நடிகர்களுக்கு அக்கா, அண்ணி, அம்மா வேடங்களில் நடித்தும் ரசிகர்களை கவர்ந்து வந்துள்ளார் ரோஜா. இவர் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் செல்வமணியை திருமணம் செய்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், குழந்தையாக இருக்கும் ரோஜாவை அவரது தாய் தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் "அட! நம்ம ரோஜாவா இது?" என்று ஆச்சர்யப்பட்டு வருகின்றனர்.