மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒரு அமைச்சர் இப்படியா செய்வது?? தீயாய் பரவும் வீடியோ..! சர்ச்சையில் சிக்கிய நடிகை ரோஜா!!
தமிழ் சினிமாவில் 1991 ஆம் ஆண்டு பிரசாந்துடன் இணைந்து செம்பருத்தி என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ரோஜா. அதனைத் தொடர்ந்து அவர் ரஜினி, விஜயகாந்த், பிரபு, சரத்குமார் என்று பல நடிகர்களுடன் இணைந்து ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகை ரோஜா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் எக்கச்சக்கமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
பின்னர் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் அவர் சின்னத்திரை தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். நாளடைவில் சினிமாவை விட்டு விலகிய அவர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அவர் தற்போது ஆந்திர மாநில சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
While Anganwadi workers and Municipal workers are protesting even on the new year without celebrating Minister Roja is celebrating the new year in a pub. pic.twitter.com/ArsR81ctDJ
— Satya 🥛 (@YoursSatya) January 2, 2024
இந்த நிலையில் அவர் புத்தாண்டு தினத்தையொட்டி டிஸ்கோ கிளப் ஒன்றில் டான்ஸ் செம ஹேப்பியாக கொண்டாடியுள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனைக் கண்ட நெட்டிசன்கள், ஒரு அமைச்சராக இருந்து கொண்டு இப்படியா செய்வது? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.