மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"சாய் பல்லவி சீதையா?" வெளியான தகவலால் ஆச்சர்யத்தில் ரசிகர்கள்.!
ராமாயணத்தை ஏற்கனவே பலர் திரைப்படமாக எடுத்துள்ளனர். தெலுங்கு மற்றும் தமிழில் வெளியான 'ராமராஜ்யம்' படத்தில், பாலகிருஷ்ணா ராமராகவும், நயன்தாரா சீதையாகவும் நடித்தனர்.
இதை தொடர்ந்து, சமீபத்தில் வெளியான 'ஆதிபுருஷ்' என்ற படத்தில், பிரபாஸ் ராமராகவும், கீர்த்தி சனோன் சீதையாகவும், சயீப் அலிகான் ராவணனாகவும் நடித்திருந்தனர்.
தற்போது 3டி தொழில்நுட்பத்தில் மற்றொரு ராமாயணப் படம் தயாராக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 3கோடி செலவில் உருவாகவுள்ள இப்படத்தை நிதீஷ் திவாரி இயக்குவதாகவும், மது மந்தனா, அல்லு அரவிந்த் ஆகியோர் தயாரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் இந்தப்படத்தில் ராமராக ரன்பீர் கபீரும், சீதையாக அலியா பட்டும் நடிப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போது கால்ஷீட் பிரச்சனைகளால் அலியா பட் விலகிவிட்டதாகவும், அவருக்கு பதில் சீதையாக சாய் பல்லவி நடிக்கப் போவதாகவும் கூறுகின்றனர்.