மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மீண்டும் திரையுலகில் கலக்கப்போகும் ஜெயம் பட நடிகை சதா.. வைரலாகும் புகைப்படம்.!
நம்ம வீட்டுப்பெண் போன்ற முக அமைப்பைக் கொண்ட நடிகை சதாவின் இயற்பெயர் 'சதாஃப் முஹம்மது சைய்யத்'. சதா, மகாராஷ்டிரா மாநிலம் ரத்தினகிரியைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவர் 2002ம் ஆண்டு தெலுங்கு 'ஜெயம்' படத்தில் தான் திரையுலகிற்கு அறிமுகமானார்.
தொடர்ந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்ட 'ஜெயம்' திரைப்படத்திலும், ரவியுடன் நடித்தார். மேலும் இவர் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நடன நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றுள்ளார்.
அன்னதான நிகழ்ச்சிகளில் தன் ஆடை அலங்காரத்தால், அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார் சதா. மேலும் தற்போது சதா ஒரு விலங்குகள் மீட்பு ஆர்வலராக உள்ளார். தொடர்ந்து சைவ உணவு உண்பதை மட்டுமே ஊக்குவித்து வருகிறார்.
தற்போது உணவகம் ஒன்றை நடத்தி வரும் சதா, வைல்ட் லைப் போட்டோகிராபராகவும் கலக்கி வருகிறார். மேலும் நிறைய போட்டோ ஷூட்களையும் நடத்தி வரும் சதா, தற்போது தனது புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி ரசிகர்களை கவர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சதா மீண்டும் திரையுலகில் கலக்கப்போகிறாரா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.