மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகை சமந்தாவின் அம்மாவா இது...! யாரும் எளிதில் காணாத சமந்தா அம்மாவுடன் உள்ள கியூட் புகைப்படங்கள் இதோ...
தென்னிந்திய சினிமாவில் ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவருக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.
நடிகை சமந்தா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கு நடிகரும், பிரபல முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சமீபத்தில் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களுடைய விவாகரத்து ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை தொடர்ந்து சமந்தா இப்போது தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து புதிய படம் நடிக்கிறார். அப்படத்திற்கு குஷி என பெயரிட்டுள்ளனர். சமீபத்தில் படத்தின் ஃபஸ்ட் லுக் புகைப்படங்கள் வெளியாகின.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களிலும் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் அவர், விவாகரத்துக்கு பிறகு ஹாட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் வந்த அன்னையர் தினத்தன்று மக்கள் அனைவருமே தங்களது அம்மாவின் புகைப்படங்களை ஷேர் செய்தனர். இந்நிலையில் சமந்தாவின் ரசிகர்களின் பக்கங்களில் நடிகை சமந்தா தனது அம்மாவுடன் எடுத்த இரண்டு கியூட் புகைப்படங்களை ஷேர் செய்துள்ளனர். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.