மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடக்கொடுமையே.! பச்சை குத்த வேறு இடமே இல்லையா? நடிகை சமந்தாவால் ஷாக்கான ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்த நடிகைகளில் ஒருவர் தான் சமந்தா. பாணா காத்தாடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைளில் ஒருவராக உள்ளார். மேலும் தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, விக்ரம் என பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா மகன் நடிகர் நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும், காதலித்து வந்தனர். பின்பு இருவீட்டாரின் சம்மதத்துடன் இவர்களது திருமணம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சமந்தா கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் பிஸியாகவே இருக்கும் நடிகை சமந்தா அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.
இந்நிலையில் தற்போது அவர் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் தனது விழா பகுதியில் குத்தியுள்ள டாட்டூவை முதன்முறையாக வெளிக்காட்டியுள்ளார்.
மேலும் அது என்ன பெயர் என தெளிவாக தெரியாத நிலையில், நடிகை சமந்தா என் இனிமையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இதுநாள் வரை நான் மறைத்து வைத்த டாட்டூ கடைசியாக வெளிவந்தது. நாக சைதன்யா என் கணவன், என் உலகம் என பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் அந்த டாட்டூ நாக சைதன்யாவின் பெயராக இருக்கலாம் என ரசிகர்கள் கணித்து வருகின்றனர்.