மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பணம் சம்பாதிக்க நடிகை சமந்தா செய்த காரியம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
ஏழை மக்களுக்கு உதவுவதற்காக நிதி திரட்ட நடிகை சமந்தா சென்னை ஜாம்பஜார் மார்க்கெட் சென்று காய்கறி விற்ற சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்,தெலுங்கு என பல மொழிகளிலும் பிரபலமான நடிகை சமந்தா திருமணத்திற்குப் பின்பும்,மார்க்கெட் குறையாமல் தொடர்ந்து நடித்து வருகிறார்.
மேலும் அவருக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் நடிகை சமந்தா சினிமாவில் நடித்துக் கொண்டே பிரதியுஷா என்ற அறக்கட்டளை ஒன்று ஆரம்பித்து அதன் மூலம் சமூக சேவைகளை செய்து வருகிறார்.
மேலும் இதன்மூலம் ஆந்திராவில் இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மருத்துவமனையில் சேர்த்து,அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய உதவியுள்ளார்.
மேலும் பள்ளிகளுக்கு சென்று துப்புரவுத் தொழில் செய்து மாணவ-மாணவிகளுக்கு வேண்டிய உதவிகளை செய்த செய்து வந்துள்ளார்
இந்நிலையில் விஷால் நடித்த இரும்புத்திரை படத்தின் விழாவிற்காக நடிகை சமந்தா ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்தார்.அப்போது ஏழை மக்களுக்கு உதவ நிதி திரட்ட வேண்டும் என முடிவு செய்த அவர் திருவல்லிக்கேணியில் உள்ள ஜாம்பஜார் மார்க்கெட்டுக்கு சென்று அங்குள்ள ஒரு காய்கறி கடையில் வியாபாரம் செய்யத் தொடங்கினார்.
மேலும் சமந்தா வியாபாரம் செய்யும் செய்தி அறிந்ததும் அங்கு பெரும் கூட்டம் கூடியது. மேலும் பலரும் எத்தகைய பேரமும் பேசாமல் சமந்தா சொன்ன விலைக்கே காய்கறிகளை வாங்கி சென்றனர்.
இவ்வாறு சிறிது நேரத்திலேயே கடையில் உள்ள அனைத்து காய்கறிகளும் விற்று தீர்ந்தது. பின்னர் இதில் கிடைத்த அனைத்து தொகையையும் வறுமையில் வாடும் மக்களுக்கு வழங்கி சமந்தா உதவி செய்தார்.
இவ்வாறு ஏழை மக்களுக்கு உதவுவதற்காக காய்கறி விற்ற சமந்தாவிற்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.