தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
ஊருக்குதான் உபதேசம்.. மொதல்ல உங்க ஜாதிப்பெயரை எடுங்க - ஜாதி குறித்து அறிவுரை கூறிய நடிகையை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்..!!
கடந்த சில நாட்களுக்கு முன்பு சிம்புவின் நடிப்பில் வெளியான பத்துதல திரைப்படத்தை பார்க்க சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கிற்கு பாசிமணி விற்கும் பெண்மணி தனது குழந்தைகளுடன் சென்றிருந்தார்.
அப்போது அவரை தடுத்த ரோகிணி திரையரங்க ஊழியர்கள் ராமலிங்கம் மற்றும் குமரேசன் அவர்களை உள்ளே விடாமல் பிரச்சனை செய்ய, இதனை அங்கிருந்த பத்திரிகையாளர் ஒருவர் வீடியோ எடுத்து அவர்களை உள்ளேவிட கோரி கண்டித்து இருந்தார். அதன் பின் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்ட நிலையில், இந்த வீடியோ பெரும் வைரலாகி சமூக ரீதியான ஏற்றத்தாழ்வுகளை காண்பிப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டுகள் இருந்தன.
இதனையடுத்து இது குறித்து விளக்கம் அளித்த திரையரங்கு நிர்வாகம் யுஏ சான்றிதழ் காரணமாக 12 வயது உட்பட்ட குழந்தையை அழைத்துச்செல்லக்கூடாது என ஊழியர்கள் அவ்வாறு செயல்பட்டதாக கூறினார். ஆனால் காவல்துறையினர் விசாரணை முன்னெடுத்த பின்னர் திரையரங்கு ஊழியர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.
இந்த விஷயத்திற்கு திரையுலகினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், சனம் செட்டியும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "திரையரங்கில் நடந்த நிகழ்வு வீடியோ எடுத்த நபருக்கு எனது பாராட்டுகளை தெரிவிக்கிறேன்.
இவ்வாறான விஷயங்கள் மூலமாகவே ஜாதி இன்னும் இருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்கிறோம். இதுபோன்ற பிரச்சனை நடந்தால் தயங்காமல் அதனை வீடியோ எடுத்து பதிவிடுங்கள். அதனை தட்டிக் கேட்க நாங்கள் இருக்கிறோம். ஜாதி ஏற்றத்தாழ்வு எங்கும் இருக்கக்கூடாது.
கண்டிப்பாக இந்த நாள் மாறும் என்று தெரிவித்துள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் பலரும் முதலில் உங்களின் பெயரில் உள்ள ஜாதியை நீக்கிவிட்டு இந்த கருத்தை கூறுங்கள் என்று கூறி வருகின்றனர். செட்டி என்பது ஒரு சமூகத்தின் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.